உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வள்ளி ஜூவல்லரியில் விழாக்கோலம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வள்ளி ஜூவல்லரியில் விழாக்கோலம்

விழுப்புரம்: ஸ்ரீ வள்ளி ஜூவல்லரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வத்தோடு குவிந்தனர். விழுப்புரம், காமராஜர் வீதியில் ஸ்ரீ வள்ளி ஜூவல்லரி இயங்குகிறது. இங்கு அழகிய தரமான ஹால்மார்க் நகைகள் விற்பனைக்கு உள்ளன. மிக அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட டிசைன்களில் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளன. நியாயமான விலை, நிறைவான தரத்தோடு உள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். நியாயமான விலையில் அழகான பரிசு பொருட்கள், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அழகிய வைர நகைகள் மற்றும் தரம் வாய்ந்த அழகான வெள்ளி கொலுசுகள், வெள்ளி பாத்திரங்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும், இங்கு கோல்டு சேமிப்பு திட்டம், தங்க நகை சேமிப்பு திட்டம் ரூ.1000 முதல் 10 ஆயிரத்திற்கும் மேலும் 11 மாதங்கள் வரை செலுத்தும் வசதியுள்ளது. செலுத்திய தொகைக்கு அன்றைய விலைப்படி அவர்கள் கணக்கில் 916 தங்கமாக வரவு வைக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று விழுப்புரம் ஸ்ரீ வள்ளி ஜூவல்லரியில் பொதுமக்கள் நல்ல நாளில் அதிகமாக தங்கம், வெள்ளி பொருட்களை வாங்குவதற்கு அதிகமாக குவிந்தனர். குடும்பங்களோடு பொதுமக்கள் தங்கம் வாங்க குவிந்ததால், வள்ளி ஜூவல்லரி முழுவதுமே விழா கோலமாக காட்சியளித்தது. வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்க நகை, வெள்ளி பொருட்களை நிதானமாக தேர்வு செய்து வாங்கி செல்வதற்கான வசதியை உரிமையாளர்கள் பாண்டுரங்கன், தேவநாதன், ரங்கநாதன் ஆகியோர் செய்ததோடு., முதல் விற்பனையை உரிமையாளர் பாண்டுரங்கன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை