உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விதிமீறி இயக்கப்படும் டூரிஸ்ட் வாகனங்கள் நடவடிக்கை எடுக்க வேன் ஓட்டுநர்கள் கோரிக்கை

விதிமீறி இயக்கப்படும் டூரிஸ்ட் வாகனங்கள் நடவடிக்கை எடுக்க வேன் ஓட்டுநர்கள் கோரிக்கை

விழுப்புரம்: தமிழக பர்மிட் பெறாமல் விதிமீறி இயங்கும் டூரிஸ்ட் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் வேன் ஓட்டுநர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். விழுப்புரம் டூரிஸ்ட் வேன் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் பிச்சைமுத்து, செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் நேற்று, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அளித்த மனு: விழுப்புரத்தில் உள்ள எங்கள் சங்கத்தில் 70 பேர் பதிவு செய்து ஓட்டி வருகின்றனர். இவர்களை நம்பி, 250க்கும் மேற்பட்ட தினக்கூலி டிரைவர்கள் உள்ளனர். நாங்கள், சுப நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாவிற்கு வெளியூர்களுக்கு வாடகைக்கு இயக்கி வருகிறோம். பெரும்பாலும், டூரிஸ்ட் வேன்கள், வங்கி கடன் பெற்று வாங்கி, அதற்கு தவணை செலுத்தி வரும் நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்ட பயணிகளை மட்டுமே நாங்கள் ஏற்றி வருகிறோம். தற்போது, புதுச்சேரி மாநில வேன் ஓட்டு நர்கள், தமிழக பர்மிட் பெறாமல், விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து பல இடங்களில் விதிமீறி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது. வருவாயின்றி வாகனத்திற்கான வங்கி கடன் தவணை செலுத்தாமல் வாகனம் பறிமுதல் செய்யும் நிலையும் உள்ளது. தமிழக பர்மிட் பெறாமல் இயக்கும், புதுச்சேரி வாகன ஓட்டுநர்கள் பலர், இங்குள்ள வேன் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கின்றனர். இதனால், அரசுக்கு வரியும் வராமல் பாதிக்கிறது. இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனை நடத்தி, விதிமீறும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை