உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.ஏ.ஓ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகம் எதிரே வி.ஏ.ஓ.,கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம நிர்வாக முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர்கள் சுதாகர், சீனுவாசன் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் ராம்குமார், வீரசேகர், கோபிநாதன், ராஜ்மோகன், செல்வகுமார், உமாசங்கர் உட்பட 50க்கு மேற்பட்ட வி.ஏ.ஓ.,கள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், டிஜிட்டல் கிராப் சர்வே திட்டதில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே கணக்கிடுவதற்கு தனியாக கையடக்க கணினி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டம் நடத்திய வி.ஏ.ஓ.,களை சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் நேரில் அழைத்து கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.

விழுப்புரம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஜெயராமன், துணைச் செயலாளர் மணிபாலன் முன்னிலை வகித்தார்.ஒருங்கிணைப்பாளர் லோகேஷ், கொள்கை பரப்பு செயலாளர் முருகதாஸ் கண்டன உரையாற்றினர். பொருளாளர் லட்சுமணன், வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை