உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் (தனி) தொகுதிக்கு வி.சி., குறி

திண்டிவனம் (தனி) தொகுதிக்கு வி.சி., குறி

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட திண்டிவனம் (தனி) தொகுதியை கேட்டுப் பெற வி.சி., முயற்சித்து வருகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட துவங்கி விட்டனர். இந்த தேர்தலில், விழுப்புரம் சட்டசபை தொகுதியில் 6 தொகுதிகள் உள்ளடங்கிய நிலையில், திண்டிவனம், வானுார் என 2 தனி தொகுதிகள் உள்ளது. இதில், கடந்த லோக்சபா தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற ரவிக்குமார் எம்.பி., திண்டிவனம் (தனி), வானுார் (தனி) தொகுதிகளில் மட்டும் 20 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றிருந்தார். இதையொட்டி, வரும் சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளை குறி வைத்த நிலையில், தி.மு.க., விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் பேராதரவை பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், வானுார் (தனி) தொகுதியில் சட்டசபை தேர்தலில் நிற்பதற்கான பணிகளை துவக்கியதோடு, மக்களிடம் ஓட்டுகளை கவரும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். இதையொட்டி, சிட்டிங் எம்.எல்.ஏ., லட்சுமணன், வானுார் தொகுதிக்கு புஷ்பராஜிற்கு சீட் பெற்று தந்து வெற்றி பெற வைப்பது என்பதில் உறுதியாக உள்ளார். இதையறிந்து கொண்ட, தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., அடுத்தபடியாக உள்ள திண்டிவனம் (தனி) தொகுதியை கேட்டு பெறுவதில் முனைப்போடு உள்ளனர். ஆனால், இங்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள மஸ்தான் எம்.எல்.ஏ., திண்டிவனம் (தனி) தொகுதியை தனது ஆதரவாளர் ஒருவருக்கு பெற்றுவிட வேண்டும் என முயற்சியில் இறங்கியுள்ளார். இதையொட்டி, தற்போது முதலே தி.மு.க., தலைமையிடம் வி.சி., தலைவர் திருமாவளவன், விழுப்புரம் மாவட்டத்தில் தங்களுக்கு ஒரு தொகுதி கண்டிப்பாக வேண்டும் என கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி