உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொரவி ஊராட்சியில் இருந்து டி.பனப்பாக்கத்தை நீக்க வேண்டும் வி.சி., கட்சியினர் மறியல்: 3 பேர் கைது

தொரவி ஊராட்சியில் இருந்து டி.பனப்பாக்கத்தை நீக்க வேண்டும் வி.சி., கட்சியினர் மறியல்: 3 பேர் கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி ஊராட்சியிலிருந்து ஒரு கிராமத்தை நீக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி ஊராட்சியில் மதுரா (துணை) கிராமமாக டி.பனப்பாக்கம் உள்ளது. இந்த கிாமத்தில், தொரவி காலனி பகுதி மக்கள் தேர்தலில் நின்று தலைவராக முடிவதில்லை. அதனால், டி.பனப்பாக்கம் கிராமத்தை தொரவி ஊராட்சியிலிருந்து நீக்கி அ.பனப்பாக்கம் ஊராட்சியில் சேர்க்கக் கோரி நேற்று காலை 9:00 மணியளவில் வி.சி.,கட்சி கிளைச் செயலாளர் பற்குணன் தலைமையில் விழுப்புரம் - வழுதாவூர் சாலையில் மறியல் போாட்டம் நடந்தது.தகவல் அறிந்த விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், பி.டி.ஓ., குலோத்துங்கன் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி, 10:30 மணிக்கு மறியலில் ஈடுபட்ட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை