உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

விழுப்புரம் : மினி சரக்கு வாகனத்தில் மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.வளவனுார் சப்இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், நேற்று முன்தினம் ஆண்டிப்பாளையம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, மினி சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர், வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு தப்பியோடினார்.மணலுடன் கூடிய சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் கடத்திய விழுப்புரம் சாலாமேடு அஜீத் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ