மேலும் செய்திகள்
பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது
04-Sep-2024
வானுார்: கிளியனுார் சோதனைச் சாவடியில், கலால் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.விழுப்புரம் கலால் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் நடந்த சோதனையில், அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாராயம், மதுபாட்டில் கடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்கள், பஸ் மற்றும் வேன்களில் கண்காணித்து, மதுபாட்டில்கள் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலால் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகன், திண்டிவனம் கோட்ட கலால் அலுவலர் கோவர்தனன், டாஸ்மாக் தனி தாசில்தார் கலா, வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருள்ரமேஷ் குமார், தலைமைக் காவலர் ரியாஸ், போலீஸ்காரர் தண்டபாணி உடனிருந்தனர்.
04-Sep-2024