மேலும் செய்திகள்
221 வாகனங்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு
10-Jun-2025
விழுப்புரம் : விழுப்புரம் வட்டாரத்தில் நடைபெற்ற வாகன சோதனையில், ரூ. 1.70 ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டது.விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் மேற்பார்வையில், கடந்த 7ம் தேதி திடீர் வாகன சோதனை நடந்தது. விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டமங்கலம், கண்டாச்சிபுரம், அரகண்டநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், வாகன போக்குவரத்து ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், முருகவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். வாகன வரி மற்றும் தகுதி சான்று உள்ளிட்ட காரணங்களுக்காக 2 பொக்லைன் இயந்திரம், ஆட்டோ மற்றும் மினி வேன் உள்ளிட்ட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன வரி ரூ.1.70 லட்சமும், இணக்க கட்டணமாக ரூ. 27 ஆயிரமும் வாகன உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்பட்டது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் பதிவு பெற்ற வாகனங்கள், தமிழக பகுதி முகவரில், உரிய அனுமதியின்றி இயக்கக் கூடாது. சட்ட விதிமுறைகளை மீறி இயக்கப்படுகின்ற வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தெரிவித்தார்.
10-Jun-2025