உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் 26ம் தேதி விழுப்புரத்தில் பொது ஏலம்

மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் 26ம் தேதி விழுப்புரத்தில் பொது ஏலம்

விழுப்புரம் : விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 26ம் தேதி மது விலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகிறது. எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 17 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 85 இரு சக்கர வாகனங்கள் உட்பட 104 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகிறது. இந்த ஏலம் வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. ஏலம் கோருவோர் ஏல தொகையோடு விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளோர் வரும் 26 ம்தேதி காலை 9:00 மணிக்குள் முன்தொகை நான்கு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 2000 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். இந்த முன்பணம் ஏல தொகையில் கழித்து கொள்ளப்படும். ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்பணம் அன்றே திரும்ப தரப்படும். ஏலம் எடுத்தவர்கள் முழு தொகையையும் 7 நாட்களுக்குள் அலுவலகத்தில் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த 7 தினங்களுக்குள் ஏலம் எடுத்தவர் முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை எடுக்க தவறினால் அந்த வாகனத்தை எந்தவித முன் அறிவிப்பின்றி மறு ஏலத்திற்கு விடப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !