உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் விடுமுறை முடிந்ததால் சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்

பொங்கல் விடுமுறை முடிந்ததால் சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்

விக்கிரவாண்டி: பொங்கல் விடுமுறை நேற்றுடன் முடிந்ததால், நேற்று தென்மாவட்டங்களிலில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் அணிவகுத்து சென்றன.சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த 11ம் தேதி முதல் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கார்,பஸ், வேன் என அதிக அளவிலான வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்பிளாசாவை கடந்து சென்றன.பொங்கல் முடிந்ததும், கடந்த 15ம் தேதி முதல் 18 வரையில், 1.61 லட்சம் வாகனங்கள் சென்னைக்கு திரும்பின. விடுமுறையின் இறுதி நாளான நேற்று மாலை 6:௦௦ மணி வரையில் 40 ஆயிரம் வாகனங்கள் சென்னைக்கு திரும்பின. இதற்காக டோல் பிளாசாவில் சென்னை மார்க்கத்தில் 8 லேன்கள் திறந்து விடப்பட்டது.அதேபோன்று, திருச்சி மார்க்கத்தில் வழக்கமான 4 லேன்களுடன் கூடுதலாக 2 லேன்கள் திறக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் நெரிசலின்றி சென்றன.சாலைகளில் போக்குவரத்து அதிகரித்ததால் சாலை சந்திப்புகளில் வாகனங்கள், பாதசாரிகள் கடக்க முடியாமல் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது .எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில் போலீசார் மற்றும் டோல் பிளாசா ஊழியர்கள் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ