உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

விழுப்புரம்; விழுப்புரத்தில் விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விழுப்புரம் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் விழுப்புரத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விதிமுறை மீறி வந்த வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிந்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே திருச்சி சாலை சந்திப்பில், பைக்குகளில் மொபைல் போன் பேசியபடியும், 3 பேர் அமர்ந்தும், அதிவேகமாக ஓட்டி வந்தவர்கள் என அனைவரையும் நிறுத்தி வழக்குப் பதிந்தனர்.மேலும், விதிமுறை மீறி சென்ற வாகன ஒட்டிகளுக்கு, போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். விபத்துகள் அதிகரிப்பதால், கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.மொபைல்போன் பேசியபடி இயக்குவதால் அதிக விபத்தும், உயிரிழப்புகளும் ஏற்படுவதை விளக்கி, அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த விதிமீறல்கள் குறித்து நகரம் முழுதும் 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை