மேலும் செய்திகள்
சென்னிமலை டவுன் பஞ்.,ல்100 சதவீதம் வரி வசூல்
26-Apr-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டத்தில் பேவர் பிளாக் சாலை, திடக்கழிவு மேலாண்மை செயலாக்க திட்டத்திற்கு 26.83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டம் சேர்மன் அப்துல் சலாம் தலைமையில் நடந்தது. துணைச் சேர்மன் பாலாஜி, செயல்அலுவலர் ஷேக் லத்தீப் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் விக்கிரவாண்டி பாரதி நகர், வெங்கடேஸ்வார நகரில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை, 12.83 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை செயலாக்க திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
26-Apr-2025