உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி வடபுத்துார் கிராம மக்கள் மறியல்

வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி வடபுத்துார் கிராம மக்கள் மறியல்

செஞ்சி: வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி வடபுத்துார் கிராம மக்கள் செஞ்சி - திண்டிவனம் சாலையில் மறியல் போாட்டத்தில் ஈடுபட்டனர்.செஞ்சி அடுத்த வடபுத்துார் கிராம மக்கள் வெள்ள நிவாரணம் கேட்டு அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று முற்பகல் 11:45 மணியளவில் செஞ்சி - திண்டிவனம் சாலையில் களையூர் கூட்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் வருவாய்த் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கலெக்டரிடம் பேசி வெள்ள நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர். அதனையேற்று, மதியம் 12:15 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கோட்டக்குப்பம்

புயல் நிவாரண தொகை வழங்கக்கோரி பெரிய கொழுவாரியில் மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி நேற்று காலை 8:30 மணியளவில் அப்பகுதி மக்கள், பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 8:50 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ