உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சுடுகாட்டிற்கு இடம் கேட்டு கிராம மக்கள் மறியல்

சுடுகாட்டிற்கு இடம் கேட்டு கிராம மக்கள் மறியல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெரியதச்சூர் அடுத்த ரெட்டணை புதுக்காலனியைச் சேர்ந்தவர் ராஜீ, 42; கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை மாரடைப்பால் இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாததால் அப்பகுதி மக்கள் திரண்டு கூட்டேரிப்பட்டு சாலையில் காலை 8.00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன், வி.ஏ.ஓ., லோகு, ஊராட்சி தலைவர் குமுதா ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் கோரிய இடத்தில் அளவீடு செய்து இடம் ஒதுக்கி தந்தனர். இதையடுத்து 9:00 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை