உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், தொகுதி மேற்பார்வையாளர்கள் துரை சரவணன், கருணாநிதி, ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். தேர்தல் மண்டல பொறுப்பாளர் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.மாவட்டத்தில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றிக்கு கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் கட்சியினர் ஒருங்கிணைந்து, தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களை, பொது மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவு திரட்ட ஆலோசனை வழங்கப்பட்டது.மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், தலைமைக் கழக வழக்கறிஞர் சுரேஷ், நகர செயலாளர்கள் சக்கரை, ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், பிரபாகரன், ராஜா, முரளி, ராஜி, கணேசன், மைதிலி ராஜேந்திரன், செல்வமணி, வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா.ஒன்றிய சேர்மன்கள் வாசன், சச்சிதானந்தம், உஷா முரளி, முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், இளங்கோவன்.நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக கருணாநிதி, அண்ணாதுரை சிலைக்கு, அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை