| ADDED : நவ 27, 2025 04:59 AM
விழுப்புரம்: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் 11 வெற்றிக் கோப்பைகளை வென்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் கோ ப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனர். சமீபத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான இறுதிப் போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் 11 போட்டிகளில், வெற்றி பெற்று பதக்கம் வென்றுள்ளனர். இதன்படி பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டியி லும், பள்ளி மாணவிகள் தடகள போட்டியிலும், பள்ளி மாணவர்கள் இருவர் அணி மற்றும் மாணவிகள் இருவர் அணியினரும் கேரம் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் வென்றனர். பள்ளி மாணவர்கள் அணி கைப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது. கல்லுாரி மாணவிகள் பிரிவு ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும், கல்லுாரி மாணவர்கள் பிரிவு கையுந்து போட்டியில் வெள்ளிப் பதக்கமும், மாற்றுத் திறனாளிகள் பிரிவு கைப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கமும், மாற்றுத்திறனாளிகள் பெண்கள் பிரிவு போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதேபோல், கல்லுாரி மாணவிகள் பிரிவு ஜூடோ போட்டியில் வெள்ளிப் பதக்கமும், பள்ளி மாணவர்கள் அணியினர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வெ ன்றனர். இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் தெரிவித்துள்ளார்.