உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாஜி கவுன்சிலர் கலெக்டருக்கு கோரிக்கை மனு

விழுப்புரம் மாஜி கவுன்சிலர் கலெக்டருக்கு கோரிக்கை மனு

விழுப்புரம் : விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்திட, முன்னாள் கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் மக்கள் நல்வாழ்வு பாதுகாப்பு அறக்கட்டளை தலைவரான முன்னாள் கவுன்சிலர் அகமது, கலெக்டர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தின் மையப்பகுதியில், பயணிகளின் வசதிக்காக ைஹமாஸ் விளக்குகள் அமைத்திட வேண்டும். பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தி, சிலை அமைந்துள்ள பகுதியை துாய்மையாக பராமரித்திட வேண்டும். பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பகுதியில் உள்ள திடீர் பள்ளத்தை சீரமைத்திட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ