மேலும் செய்திகள்
திருவாலங்காடில் 7 செ.மீ., மழை பதிவு
20-Sep-2025
விழுப்புரம் : மாவட்டத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 18 செ.மீ., மழை பதிவாகியதால் பஸ் நிலையம், தரைப்பாலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதன்படி, மி.மீ., அளவீட்டில், விழுப்புரம் 189, கோலியனுார் 105, வளவனுார் 118, கெடார் 157, முண்டியம்பாக்கம் 53, நேமூர் 31.20, கஞ்சனுார் 40, சூரப்பட்டு 112, வானுார் 18, திண்டிவனம் 31, மரக்காணம் 2, செஞ்சியில் 62, செம்மேடு 56, வல்லம் 44, அனந்தபுரம் 50.60, அவலுார்பேட்டை 71, வளத்தி 86, மணம்பூண்டி 115, முகையூர் 106, அரசூர் 45, திருவெண்ணெய்நல்லுார் 39.20 என மொத்தம், 1531 மி.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 72.90 மி.மீ., மழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 18 செ.மீ., மழை பதிவாகியது. இந்த கன மழையால், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் மற்றும் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம் பகுதிகளில் தண்ணீர் குளம் போன்று தேங்கியது. இதனால், பஸ் நிலையத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தண்ணீர் அகற்றியபிறகு வாகனங்கள் சென்றது. மேலும், விழுப்புரம் தாமரைக்குளம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் கடும் அவதியடைந்தனர்.
20-Sep-2025