உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி விழுப்புரம் மாணவர்கள் அசத்தல்

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி விழுப்புரம் மாணவர்கள் அசத்தல்

விழுப்புரம்: மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் வென்று சாதனை படைத்த விழுப்புரம் மாணவ, மாணவியரை லட்சுமணன் எம்.எல்.ஏ., பாராட்டி வாழ்த்தினார். தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது. சென்னை, கிண்டியில் கடந்த 26,27 ம் தேதிகளில் நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், விழுப்புரத்தில் இருந்து ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில் மாணவர்கள் கிருத்தின், தீஷ்மா, ஷிக்பா மரியம், கனியமுதன், நிரல்யா ஆகியோர் பங்கேற்றனர். இதில் கிருத்தின் இரு வெள்ளி பதக்கங்களையும், தீஷ்மா இரு வெண்கலம், ஷிக்பா மரியம், கனியமுதன் ஆகியோர் தலா இரு வெண்கலத்தையும் வென்றனர். நிரல்யா சிலம்பத்தில் ஒரு தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்த மாணவ, மாணவியரை லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை