மேலும் செய்திகள்
சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை
04-Nov-2024
விழுப்புரம்,: பெங்களூருவில் நடந்த தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்ற விழுப்புரம் மாணவர்கள் 35 பேர் பதக்கங்களை வென்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரு அத்திபள்ளியில், கடந்த 17ம் தேதி தொடங்கி தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.தமிழகத்திலிருந்து விழுப்புரம், மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, மாணவர்கள் குழுவினர் பங்குபெற்றனர். இதில், விழுப்புரம் எம்.எஸ். சிலம்பாட்ட கழகத்தின் மாணவர்கள், விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் பள்ளி மாணவர்களும், சிலம்பாட்ட கழக பயிற்றுனர் சாமிவேல் தலைமையில் பலர் கலந்துகொண்டனர். அதில், ஒற்றை கம்பு சிலம்பாட்ட பிரிவில் 35 மாணவர்கள் பங்கு பெற்று, பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று முதல், இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்து, பரிசு கோப்பை மற்றும் பதக்கங்களை வென்றனர்.மாணவர்கள் சஞ்சய், கோகுல்ராஜ், பாலாஜி, வருனேஷ், செந்தில், சண்முகபிரியன், குகன், விக்ரம் ஆகியோர் முதலிடம் பிடித்து, தங்க பதக்கம் வென்றனர். ஆசியா தஸ்னிம், போதனா, சிதேஸ், காவியா, அருண், மதன்ராஜ், பாலாஜி, லியோசான்தோஸ் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளி பதக்கம் வென்றனர். சுமித்ரா, பிரியதர்ஷனி, சுசித்ரா, அவினாஷ், பவிராஜன், வெற்றிமாறன், நிமலன், ரத்தீஷ், ஹரிஹரன், பிரதீஷ், கார்த்திகேயன், ஜெகதிஷ், சரன், லோகேஷ், தரன் ராஜ், சாம்அன்டனி, புவனேஸ்வரன், தாமேஸ், ஜெயசிகாமணி ஆகியோர் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர்.
04-Nov-2024