விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி
விழுப்புரம் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது.விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில், அனைவரும் தேர்ச்சியடைந்து பள்ளிக்கு முழு தேர்ச்சி விழுக்காடு பெற்று தந்துள்ளனர். இப்பள்ளி மாணவர் தர்ஷன் 500க்கு 488 மதிப்பெண்ணும்,மாணவர் ராகுல் 482 மதிப்பெண்,மாணவி பிவினா 480 மதிப்பெண் பெற்றுசிறப்பிடங்களைப் பிடித்துள்ளனர்.அறிவியல் பாடத்தில் 24 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தாளாளர் சோழன் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரிதிவிராஜ், வழக்கறிஞர் மனோ உட்பட ஆசிரியர்கள் பலர் மாணவ மாணவிகளை பாராட்டி, வாழ்த்தினர்.