உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உக்ரைன் நாட்டு பெண்ணை கரம்பிடித்த விழுப்புரம் வாலிபர்

உக்ரைன் நாட்டு பெண்ணை கரம்பிடித்த விழுப்புரம் வாலிபர்

விழுப்புரம்,:உக்ரைன் நாட்டு காதலியை விழுப்புரம் வாலிபர் பெற்றோர் சம்மதத்துடன் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொண்டார்.விழுப்புரம் அருகே வி.மருதுாரைச் சேர்ந்த ஜெயகுமார் - சுதா தம்பதி மகன் உதயகுமார், 30. பி.இ., பட்டதாரியான இவர், எம்.எஸ்., படித்து முடித்த பின், ஸ்லோவேக்கியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த செர்ஹி கைலோவி - இரினா கைலோவி தம்பதி மகள் அனஸ்டாசியா என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. தங்கள் பெற்றோரின் சம்மத்துடன் இருவரும் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள, கடந்த 30ம் தேதி ஸ்லோவேக்கியாவில் இருந்து விழுப்புரம் வந்தனர். நேற்று முன் தினம் அவர்களுக்கு, தமிழ் கலாசாரப்படி, டி.கப்பியாம்புலியூர் பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது. மணப்பெண் அனஸ்டாசியா, தமிழர் கலாசாரப்படி பட்டு சேலை அணிந்திருந்தார். மணமக்களை, அமைச்சர் பொன்முடி வீடு தேடிச் சென்று வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 06:42

\ மணமக்களை, அமைச்சர் பொன்முடி வீடு தேடிச் சென்று வாழ்த்தினார் // பார்த்து ...... காக்கா கடி கடிச்சிட்டு தர்றேன் ன்னு சொன்னா என்னத்துக்காவும் ??


MUTHU
பிப் 05, 2025 21:33

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் தொழில் ரீதியாக அமெரிக்கா சென்ற இந்தியா பெண்கள் அங்குள்ளவர்களை மணம் முடித்தனர். எல்லாம் அமெரிக்க எதிர்காலம் கருதி தான். ஆனால் நான்கைந்து ஆண்டுகளிலேயே அவர்களில் பெரும்பாலோனோருக்கு டைவோர்ஸ் ஆனது. காரணம் இரண்டு குழந்தை பிறந்த உடனே இந்திய பெண்கள் படுக்கையில் முகம் திருப்பி படுத்துக்கொள்வதனால் என்று தகவல்கள் வந்தது.


Mani . V
பிப் 05, 2025 05:50

இது என்னமோ இப்பொழுதுதான் நடப்பது போன்று பேஷன் ஆகிப் போனது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நான்காம் தூண்களை நினைத்தால் ரொம்பப் பெருமையாக இருக்கிறது.


புதிய வீடியோ