உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் திருத்தப்பணி படிவம் வழங்கல்

 வாக்காளர் திருத்தப்பணி படிவம் வழங்கல்

வானுார்: கிளியனுார் ஒன்றியத்திற்குட்பட்ட கொடூர் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வானுார் தொகுதிக்குட்பட்ட கிளியனுார் ஒன்றியத்தில் கொடூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான படிவங்கள் வழங்கும் பணியை, வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்ரபாணி பார்வையிட்டு, படிவங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம், பாசறை ஒன்றிய செயலாளர் சுமன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் கண்ணன், கொடூர் நிர்வாகிகள் பெருமாள், சதீஷ், சங்கர், உலகரட்சகன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ