விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட, விழுப்புரம் சட்டசபை தொகுதியில் நேற்று நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி சிறப்பு முகாம்களை, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார். கோலியனுார் ஒன்றியம், சாலை அகரம் ஊராட்சி பள்ளி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடிகளில் நடந்த புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் குறித்த சிறப்பு முகாமை எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு, விண்ணப்பங்களை சரிபார்த்து, ஆய்வு மேற்கொண்டார். முகாமில் இருந்த கட்சி முகவர்கள், நிர்வாகிகளிடம், வாக்காளர்கள் விடுபடாமல் சேர்க்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, வளவனுார் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் அரசு தொடக்க பள்ளிகளில் நடந்த வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமையு ம் ஆய்வு செய்தார். தி.மு.க., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், கோலியனுார் ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வளவனுார் பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, பேரூராட்சி செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத். தலைமைக் கழக வழக்கறி ஞர் சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட, ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.