உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சாத்தனூர் பள்ளி நூற்றாண்டு விழா

வி.சாத்தனூர் பள்ளி நூற்றாண்டு விழா

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த வி. சாத்தனூர் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா நடந்தது.விக்கிரவாண்டி ஒன்றியம் வி. சாத்தனூர் தொடக்கப்பள்ளி துவங்கி 109 ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பரிபூரணம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவி விமலா தமிழரசன் துணைத் தலைவர் குஜன் முன்னிலை வகித்தார்.பள்ளி உதவி ஆசிரியை தேவகி வரவேற்றார்.பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.தலைமை ஆசிரியர்கள் மோகன்ராஜன், ஜெயசெல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பானு, ஆசிரியர் பயிற்றுனர்கள் இருதயராஜ், சிலம்பரசன், பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் நடராஜன், ஜெயந்தி, விஜயா, சித்ரா, அய்யனார், வெங்கடேசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ