உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

வீடூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

விக்கிரவாண்டி: வீடூர் அணைத்து நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளி யேற்றம் நிறுத்தப்பட்டது.திண்டிவனம் அடுத்த வீடூர் அணைக்கு கடந்த 15 தினங்களுக்கு முன் பெய்த பெஞ்சல் புயல் மழை காரணமாக அணையில் நீர் மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து அணை பாதுகாப்பு கருதி கடந்த 18ம் தேதி வரை உபரி நீரை அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து முற்றிலும் குறைந்து 916 கன அடியாக இருந்தது.அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் ேஷாபனா, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் கண்காணித்து அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவதை நிறுத்தினர்.நேற்று பிற்பகல் 4:00 மணி நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளவான 605 மில்லியன் கனஅடி (32 அடி) கொள்ளவில், 450.311 மில்லியன் கன அடி (30.025அடி) இருப்பு உள்ளது. இது அணையின் கொள்ளவில் 74 சதவிகித நீர் இருப்பு ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ