நீர் மேலாண்மை கருத்தரங்கம்
செஞ்சி, : நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கூட்டமைப்புகள் சார்பில் நீர்மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் செஞ்சியில் நடந்தது.சங்க பொருளாளர் பாலாஜி சுரேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வரதராஜன், ரவிச்சந்திரன், சேகர், துரைமுருகன், கார்வண்ணன், புஷ்பா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் அறவாழி வரவேற்றார்.தலைவர் அன்பழகன் துவக்கவுரையாற்றினார். நீர் மேலாண்மையில் தர்சார்பு தலைப்பில் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஜனகரஞ்சன், சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்து எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்துார் பாண்டி ஆகியோர் பேசினர்.முன்னாள் சேர்மன் ரங்கநாதன், வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சங்கர், ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கரும்பு விவசாயிகள் அணி மாநில செயலாளர் சக்திவேல், கன்னிகா டிரஸ்ட் நிர்வாகி ரமேஷ்பாபு உட்பட பலர் கருத்துரை வழங்கினர்.தென் பெண்ணையாறு - நந்தன் கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு 309 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும், நந்தன் கால்வாயை முறைப்படுத்தப்பட்ட கால்வாயாக அறிவிக்க வேண்டும். கால்வாயில் தண்ணீர் வீணாகாமல் விழுப்புரம் மாவட்ட ஏரிகளுக்கு வருவதற்கு ஏற்ப கொளத்துார் ஷட்டரை மூடாமல் இருக்க வேண்டும் என்பது உட்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.