உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தண்ணீர் பந்தல்கள் சேதம்

தண்ணீர் பந்தல்கள் சேதம்

அவலுார்பேட்டை: வளத்தி பகுதியில் த.வெ.க., சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளத்தி அடுத்த கடலி, அண்ணமங்கலம், சாத்தனந்தல், கன்னலம் உள்ளிட்ட கிராமங்களில் த.வெ.க., சார்பில் கடந்த வாரம் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு இந்த தண்ணீர் பந்தல்கள் உள்ள இடங்களில் வைக்கப்பட்ட விஜய் பேனர்களை கிழித்தும், அங்கிருந்த தண்ணீர் மண்பானைகளையும் மர்ம நபர்கள் உடைத்தெறிந்தனர்.இது குறித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி