பேசும் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
வானூர்; குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கிளியனூர் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பேசும் பெருமாள் என்றழைக்கப்படும் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் 9ம் ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை 6;00 மணிக்கு, ஸ்ரீமந்நாராயணனுக்கும், ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.