உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் கோப்பை பைக் பயண குழுவினருக்கு வரவேற்பு

முதல்வர் கோப்பை பைக் பயண குழுவினருக்கு வரவேற்பு

விழுப்புரம்: முதல்வர் கோப்பைக்கான பைக் விழிப்புணர்வு பயண குழுவினருக்கு விழுப்புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ராமநாதபுரம், தனுஷ்கோடிக்கு முதல்வர் கோப்பைக்கான பைக் விழிப்புணர்வு பயணம் நேற்று முன்தினம் நடந்தது. சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற விழிப்புணர்வு பைக் பயண குழுவினரை விழுப்புரம் முத்தாம்பாளையம் புறவழிச்சாலையில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆலிவாசன் வரவேற்றார். புறவழிச்சாலையில் இருந்து விழுப்புரம் நகரின் வழியாக பெருந்திட்ட வளாகத்திற்கு வந்த பயண குழுவினர் திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி