உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற மாணவருக்கு வரவேற்பு

ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற மாணவருக்கு வரவேற்பு

விழுப்புரம்: ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று விழுப்புரம் திரும்பிய மாணவருக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய பிரதேசம் குவாலியரில் 50வது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. கடந்த 1ம் தேதியில் இருந்து 4ம் தேதி வரை நடந்த இந்த போட்டியில், 22 மாநிலங்களில் இருந்து 450 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், விழுப்புரம் மாவட்ட கேரம் சங்கத்தைச் சேர்ந்த, விழுப்புரம் துாய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவர் பவன்குமார் விளையாடினார். தனி நபர் போட்டி மற்றும் சாம்பியன்ஷிப் போட்டியில்தங்க பதக்கத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இவர், கடந்த 3 ஆண்டுகளாக தேசிய அளவிலான கேரம் போட்டிக்கு தகுதிபெற்று பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கு மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன் வீரர் பவன்குமார், நேற்று மாலை 3:55 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் பிளாட்பாரம் 5ல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திறங்கினார். இவரை, மாவட்ட கேரம் சங்க செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நிர்வாகிகள், பயிற்சியாளர் கோபிகிருஷ்ணன் மற்றும் துாய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். மாணவர் பவன்குமார் பெற்றோர் விஜயகுமார், சசிகலா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை