உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

 நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நந்திவாடி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமை தாங்கினார். ஒன்றிய ஜெ, பேரவை செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார் மாவட்ட ஜெ., பேரவை துணைத் தலைவர் பெரியான் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சண்முகம் ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் குமார் பழனியம்மாள், இணைச் செயலாளர் பிரபா சவுந்தர்ராஜன் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், அணி செயலாளர்கள் இளங்கோ, மணி, வீரப்பன், அண்ணாமலை, அன்பரசன், திருநாவுக்கரசு, செந்தில்குமார், முரளி , போஸ்கோ, கண்ணன், மணிகண்டன், மகளிர் அணி கலையரசி, அமராவதி, தொழில் நுட்ப அணி அந்துவான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ