கருணாநிதி பிறந்த நாள் விழா வீடூரில் நலத்திட்ட உதவி வழங்கல்
மயிலம் : மயிலம் ஒன்றியத்தில் உள்ள வீடூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது.தீவனுார் பஸ் நிலையம் அருகே நடந்த விழாவிற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சேது நாதன், செழியன், மணிமாறன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் வரவேற்றார்.வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி இனிப்பு வழங்கினார். மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர், மாநில தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, இளைஞர் அணி விஜயகுமார், சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் பாலு சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், கவுன்சிலர் சுந்தரி தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் சின்னதுரை, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முத்துவேல், மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.