நலத்திட்ட உதவி வழங்கல்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்தில் முதல்வர் பிறந்த நாளையொட்டி, தெற்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சிந்தாமணியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி மாணவர்களுக்கு நோட்டு, பேனா பயனாளிகளுக்கு வேட்டி, சேலை, வழங்கி பேசினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி துரை வரவேற்றார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெயபால். மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், கண்காணிப்பு குழு எத்திராசன், மாவட்ட தொண்டர் அணி அருள்மொழி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பாரதி, தொழில்நுட்ப அணி சாம்பசிவம், கபிலன், கிளைச் செயலாளர் ராஜ்காந்த், சந்திரன், ரத்தின சபாபதி, சக்திவேல், எழிலதிபன், சுதாகர், ஊராட்சி தலைவர் வாசுகி, துணைத் தலைவர் சுமதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.