கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே டி.வி.நல்லுார் மக்கள் தவிப்பு
திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்த பலர், ரேஷன் கார்டு கோரி ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், தகுதி உள்ள நபர்களுக்கு ரேஷன் கார்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர் ரேஷன் கார்டு பெற்றுக் கொள்ளுமாறு அவர்களது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.இதை அடுத்து விண்ணப்பதாரர்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் ரேஷன் கார்டு கேட்டுள்ளனர். அப்போது நமது மாவட்டத்திற்கு முதல்வர் வருகை தர உள்ளார். முதல்வர் கையால் உங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் மழை, வெள்ளம் காரணமாக முதல்வரின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், 300க்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டு பெற முடியாத சூழலில் உள்ளனர்.மேலும், தற்போது வழங்கி வரும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண பொருட்களும் அவர்களால் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.