மேலும் செய்திகள்
வேளாண் அதிகாரிகள் ஆய்வு
12-Jan-2025
விக்கிரவாண்டி: மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்பொழுது வழங்கப்படும் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வீசிய பெஞ்சால் புயல், கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் விவசாய சாகுபடி நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதனையொட்டி, மாவட்டத்தை 100 சதவீதம் வெள்ளம் பாதித்த மாவட்டமாக அரசு அறிவித்தது. அதனையொட்டி கலெக்டர், அமைச்சர் உத்தரவின் பேரில் வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் வெள்ளம் பாதித்த நிலங்களை நேரில் ஆய்வு செய்து கணக்கீடு செய்தனர்.அதன்படி வேளாண் துறை சார்பில் நெல், வேர்க்கடலை, உளுந்து, காராமணி, கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் மாவட்டத்தில் 85 ஆயிரம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டன.தோட்டக்கலை பயிர்களான கத்திரி, வெண்டை, பாகற்காய், புடலை, தர்பூசணி, வெள்ளத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்ட மா ,கொய்யா பயிர்கள் 22 ஆயிரத்தி 900 ஹெக்டர்கள் பாதிக்கப்பட்டன.இந்த அறிக்கை, மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகள், வீடுகள் இழந்தவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் உரிய இழப்பீடு எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
12-Jan-2025