உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துார்வாரிய மண் குவியல் அகற்றப்படுவது எப்போது? 

துார்வாரிய மண் குவியல் அகற்றப்படுவது எப்போது? 

விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலைய வடிகால் வாய்க்கால் மணல் குவியல் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரத்தில் தொடர் கனமழையொட்டி புதிய பஸ் நிலையத்தில், மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனையடுத்து நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பஸ் நிலையத்தின் அருகே செல்லும் வாய்க்கால் அடைப்புகள் சீர்படுத்தப்பட்டன. புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி கோர்ட் வளாகம், பெருந்திட்ட வளாகம் முன் பகுதி வழியாக சென்ற வாய்க்காலில் அடைத்திருந்த குப்பைகள், மணல் குவியல்களை எடுத்தனர். தற்போது அந்த மண், குப்பை குவியல்கள் கழிவுகளுடன் சாலையோரம் கொட்டப்பட்டு, மலைபோல் குவிந்து கிடக்கின்றன. பஸ் நிலையத்தில் மழைநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், வாய்க்காலிருந்து எடுக்கப்பட்ட மண் குவியல், சேரும், சகதியுமாக சாலையை ஆக்கிரமித்துக்கிடக்கிறது. மீண்டும் மழை பெய்வதால், அந்த மண் குப்பை குவியல், மீண்டும் சாலையோர வாய்க்காலில் அடைபட்டு விடும். இந்த நிலையில், போக்குவரத்திற்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையிலும், குவிந்து கிடக்கும் அந்த மண் குவியலை உடனடியாக அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ