மேலும் செய்திகள்
பூச்சிமருந்து குடித்த வாலிபர் உயிரிழப்பு
10-Oct-2024
சேத்துப்பட்டு: விழுப்புரம் மாவட்டம், பருதிபுரத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 29; கார் புரோக்கர். இவர், நேற்று முன்தினம் இரவு, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வழியாக, சென்னையிலிருந்து பருதிபுரத்திற்கு காரில் சென்றார்.பின், தொடர்ந்து வந்த சிலர், காரை வழிமறித்தனர். கத்தியால் கீறி தாக்கி விட்டு, காரை பறித்து சென்றனர். ஏழுமலை புகார் படி, சேத்துப்பட்டு போலீசார் விசாரித்தனர். இதில், சென்னை மீனம்பாக்கம் மேம்பாலத்தில் கார் நிறுத்தப்பட்டிருப்பது தெரிந்தது.விழுப்புரம் மாவட்டம், குண்டலிபுலியூரை சேர்ந்தவர் சாவித்திரி. இவருக்கும், ஏழுமலைக்கும் செப்., 15ல் திருமணமானது. சென்னையில் பியூட்டி பார்லரில் சாவித்திரி பணிபுரிந்த போது, சினேகா என்பவருடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார்.திருமணம் பிடிக்காததால், கணவருக்கு மிரட்டல் விடுக்க சினேகாவுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து, சினேகா அவரது ஆண் நண்பர்கள் மூவரிடம், மிரட்டல் விடுக்குமாறு கூறியுள்ளார். அவர்கள் காரை வழிமறித்து ஏழுமலையிடம் அவ்வாறு நடந்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.சேத்துப்பட்டு போலீசார், சாவித்திரி, சினேகா மற்றும் காரை கடத்திய சஞ்சய் ஆகிய மூவரை கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
10-Oct-2024