உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வேதனை 

பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வேதனை 

வானுார் ; பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றி, மயில்கள் மற்றும் குரங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 25க்கு மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குறைகள் மற்றும் புகார் தெரிவித்து பேசியதாவது:வானுார் பகுதியில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள், மயில் மற்றும் குரங்குகள் அழித்து வருகிறது. இவற்றை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தனர்.தனியார் பூச்சி மருந்து கடைகளில் விவசாயிகளுக்கு பலவிதமான மருந்துகளை கொடுத்து பூச்சிகள் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இதனை சரி செய்ய பூச்சி மருந்து கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் தென்படுகிறது. இதனை ஆய்வு செய்து உரிய பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளித்திட அறிவுரை வழங்க வேண்டும்.தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்படும் முந்திரி கன்றுகள் தரமான முறையில் இருக்க வேண்டும். தர்பூசணி விதைகளை பருவம் துவங்கும் முன் உடனடியாக விநியோகம் செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஜனவரி முதல் வாரத்தில் திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்..கூட்டத்தில் வேளாண் பொறியியல் துறையில் இருந்து உதவி செயற்பொறியாளர் நாராயணலிங்கம், தோட்டக்கலைத் துறை அலுவலர் கீதா, வேளாண் அலுவலர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ