உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேம்பாலத்தில் விபத்தை தடுக்க நிரந்தர தடுப்பு அமைக்கப்படுமா?

மேம்பாலத்தில் விபத்தை தடுக்க நிரந்தர தடுப்பு அமைக்கப்படுமா?

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நாகப்பட்டினம் புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் விபத்தை தவிர்க்க, நிரந்தர தடுப்பு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் இருந்து நாகப்பட்டினம் நான்கு வழி சாலை துவங்குகிறது. இதற்காக, ஜானகிபுரத்தில், சென்னை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மார்க்கங்களில் மூன்று மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் வாகனங்கள் செல்வதற்கு சர்வீஸ் சாலையில் பாதை அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, திருச்சி, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் வந்து விழுப்புரத்திற்கு செல்லும் வகையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சர்வீஸ் சாலையிலேயே, நாகப்பட்டினத்திற்கு எதிரெதிர் திசையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, விபத்தை தடுக்கும் வகையில் சாலையின் நடுவில் போக்குவரத்து போலீசார் சார்பில் 'பிளக்சிபல் ஸ்பிரிங் போஸ்ட்டுகள்' அமைக்கப்பட்டன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த போஸ்ட்டுகள் வாகனங்கள் மோதியதில் சேதமடைந்துவிட்டது. இதனால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். அதனால், இப்பகுதியில் சென்டர் மீடியன் அல்லது வாகனங்கள் மோதினால் சேதமடையாத தடுப்புகள் அமைக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ