உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காட்டாற்று வெள்ளத்தில் கந்தலான இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?

காட்டாற்று வெள்ளத்தில் கந்தலான இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?

விக்கிரவாண்டி அடுத்த சின்னதச்சூரிலிருந்து வடக்கே உள்ள எசாலம், எண்ணாயிரம், ஈச்சங்குப்பம் வழியாக செஞ்சி சாலைக்கு இணைப்பு சாலையாக உள்ளது. சின்னதச்சூரிலிருந்து எசாலம் நோக்கி 3கி.மீ., துாரத்திற்கு செல்லும் இணைப்பு சாலையால் விவசாயிகளுக்கும் , மாணவர்களுக்கும், பொதுமக்களும் பல்வேறு வகைகளில் பயன்பெறுகின்றனர்.இந்த சாலை 7 ஆண்டிற்கு முன் தார்சாலையாக அமைக்கப்பட்டது. மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்த இச்சாலை கடந்த பெஞ்சால் புயல் வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து கந்தலாகி, நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு ஜல்லி பரப்பி விட்டதுபோல் உள்ளது.இதனால், இச்சாலையை பயன்படுத்தி வந்த விவசாயிகள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை