உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்... செயல்படுத்தப்படுமா?

விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்... செயல்படுத்தப்படுமா?

திருக்கோவிலுார்: விழுப்புரம் - காட்பாடி இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்பாடியிலிருந்து திருப்பதி, சென்னை, விழுப்புரம், பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுவதால், முக்கிய ஜங்ஷனாக உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வட இந்தியாவிற்குச் செல்லும் ரயில்கள் விழுப்புரம் - காட்பாடி மார்க்கத்தில் பயணிக்கிறது.இந்த வழித்தடத்தில் விழுப்புரம் - புரூலியா, விழுப்புரம் - காரக்பூர், திருப்பதி - ராமேஸ்வரம், திருப்பதி - மன்னார்குடி, தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில்களும், விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில்கள் மற்றும் ஏராளமான சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.இதனால், விழுப்புரம் - காட்பாடி ரயில் பாதை முக்கிய வழித்தடமாக உள்ளது. தற்போது ஒரு வழி மின் பாதையாக இருப்பதை, இரட்டை வழித்தடமாக மாற்ற வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.இதன் மூலம் தென் தமிழகத்திலிருந்து மத்திய மற்றும் வட இந்தியாவுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த முடியும். இது தென் மாவட்ட ரயில் பயணங்களுக்கு பேருதவியாக இருக்கும்.பயணிகளின் இக்கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே விழுப்புரம் - காட்பாடி இடையே 160 கி.மீ., துாரத்திற்கு இரட்டை பாதை அமைக்க, தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு ஆய்வு செய்துள்ளது.இந்நிலையில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 12 ரயில்வே திட்டங்களுக்காக 6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலேயே பணிகள் ஆமை வேகத்தில் செயல்படுத்தப்படுவதால் நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகள் தொடங்கவில்லை.இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பிற நிதி என தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திற்கு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது.இதற்கு மறுப்பு தெரிவித்த தெற்கு ரயில்வே, நிதியை அடுத்த காலாண்டிற்கு மாற்றுவது தொடர்பான தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் நிதி பற்றாக்குறை இல்லை. தேவைக்கு ஏற்ப திட்டங்களுக்கு நிதி கிடைக்கிறது. காலாண்டுக்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது.தென் மாவட்டம் மற்றும் விழுப்புரம் பகுதி ரயில் பயணிகளுக்கு முக்கிய வழித்தடமாக இருக்கும் விழுப்புரம் - காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு தெற்கு ரயில்வே முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டியது அவசர அவசியமாகியுள்ளது. அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Aravind
ஜூன் 23, 2025 21:48

திண்டிவனம் டு நகரி ரயில் பாதை பனி முடிந்துவிட்டதா முக்கியமான திட்டம்


Rathnam Mm
ஜூன் 23, 2025 11:03

Pls take initiative run MEMU service between Chennai to Rani pattai which had stopped. And also run MEMU service between Chennai to Chitti or, the AP Govt had taken good initiatives. Only IR and TN Govt and media movement required.


R K Raman
ஜூன் 23, 2025 10:46

தஞ்சாவூர் இரட்டைப் பாதை மட்டும் ஒன்றும் நடக்கவில்லை. மிகவும் பழமையான தென் மாவட்டங்களுக்கு செல்ல ஒரு பாதை இப்படி புறக்கணிக்கப் படுவது சரியா? இத்தனை ஆண்டுகள் இந்தப் பகுதி பா உக்கள்செய்தது என்ன? பஸ் முதலாளிகளின் எதிர்ப்பாலா?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 23, 2025 10:22

மக்களுக்கு எது அவசியமோ அதை செய்ய மாட்டார்கள். ஆனால், கொள்ளையடிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார்கள் இந்த அதிகாரிகள். சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் ஏறக்குறைய எப்போதும் காத்திருப்பு பட்டியலே உள்ளது. மக்களின் வருமானத்தில் பெரும்பகுதி ஆம்னி பேருந்துகளுக்கும் ரயில்வே தட்கல் டிக்கட்டுக்களுக்குமே செலவிட வேண்டியுள்ளது. பலமுறை கூடுதல் ரயில்கள் வேண்டி குரல் கொடுத்ததும் எதுவும் நடக்கவில்லை. காரணம் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் மக்களை பற்றி அக்கறை இல்லை. ஆனால், அவர்கள் விமானத்திலோ, ரயிலில் EQ கோட்டாவிலோ பயணித்துக்கொள்வார்கள். ஆனால், மக்கள் ஆடுமாடு போல முன்பதிவற்ற பெட்டிகளில் பயணிக்க வேண்டும். அதை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இன்றைக்கு தட்கல் பயணசீட்டு முன்பதிவிற்கு ஆதார் மூலம் சோதனை கட்டாயம் என்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. ஆனால், போதிய ரயில்களை இயக்கினால் இதெற்க்கெல்லாம் தேவையில்லை. செயற்க்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள்.


R Hariharan
ஜூன் 23, 2025 09:45

அது போல் விருதுநகர் தென்காசி செங்கோட்டை இரட்டை பாதை கூடிய விரைவில் தொடங்க வேண்டும். விருதுநகர் செங்கோட்டை ஓட்டை பாதை காரணமாக அடிகனமான ரயில் சேவை விட முடியவில்லை. இந்த செக்டர் அகல பாதை மின்மயமாக்கம் ஆக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது.


UTHAMAN THIYAGARAJAN
ஜூன் 23, 2025 09:04

This railway project should be done quickly