உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிராந்தி பாட்டில் விற்ற பெண் கைது

பிராந்தி பாட்டில் விற்ற பெண் கைது

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே வெளிமாநில மது பாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கண்டாச்சிபுரம் அடுத்த மலையரசன்குப்பம் பகுதியில் வெளிமாநில மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக கண்டாச்சிபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையிலான போலீசார், நேற்று மதியம் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி சீதா, 57; தனது வீட்டின் பின்பகுதியில் மது பாட்டில் விற்றது தெரியவந்தது. உடன் அங்கிருந்த 110 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, சீதாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை