மேலும் செய்திகள்
நுாதனமாக மதுபாட்டில்கள் கடத்திய ஆசாமி கைது
16-Feb-2025
விழுப்புரம்; புதுச்சேரியில் இருந்து பஸ் மூலம் மதுபானங்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், சதீஷ் மற்றும் போலீசார் தலைமையில், நேற்று முன்தினம் விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பு அருகே பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது, புதுச்சேரி பஸ்சிலிருந்து இறங்கி வந்த விழுப்புரம் அடுத்த மலையரசன்குப்பத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கம்சலா,45; கை பையில், 100 டெட்ரா பேக் புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
16-Feb-2025