மேலும் செய்திகள்
பஸ் மோதி முதியவர் பலி
30-Nov-2024
மயிலம் ; அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் பலத்த அடிபட்டு இறந்தார். சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், 40; இவரது மனைவி பத்மா, 36; இவர் கடந்த வாரம் சென்னையில் இருந்து அவருடைய தாய் வீடான விக்கிரவாண்டி அடுத்த சித்தேரி கிராமத்திற்கு வந்துள்ளார். பின்னர் கிராமத்திலிருந்து நேற்று முன்தினம் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அன்று இரவு 8:30 மணி அளவில் மயிலம் அருகே உள்ள கன்னிகாபுரம் கிராம பஸ் ஸ்டாப்பிங்கில் ் இறங்கி நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பத்மா சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30-Nov-2024