உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்கூட்டர் மீது பஸ் மோதி விபத்து பெண் பலி: மற்றொருவர் காயம்

ஸ்கூட்டர் மீது பஸ் மோதி விபத்து பெண் பலி: மற்றொருவர் காயம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.திண்டிவனம் ரெட்டணை சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜன் மனைவி மகாலட்சுமி, 45; அதே பகுதி கந்தன் மனைவி சசிகலா, 35; இருவரும் நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்கூட்டரில் வெங்கந்துாருக்கு மாம்பழம் வாங்க புறப்பட்டனர். சசிகலா ஸ்கூட்டர் ஓட்டினார். மகாலட்சுமி பின்னால் அமர்ந்திருந்தார்.ஸ்கூட்டர் வெங்கந்துார் ரேஷன் கடை அருகே சென்றபோது, பின்னால் தீவனுார் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் மகாலட்சுமி சம்பவ இடத்திலே பலியனார். ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற சசிகலா படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை