மேலும் செய்திகள்
டெய்லர் உயிரிழப்பு
11-Aug-2025
திண்டிவனம்: வீட்டு மனை பிரச்னையில், பெண்ணை கத்தியால் வெட்டிய தகராறில் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல், 40; இவரது பெரியப்பா சுப்ரமணி, 59; இவர்களுக்கிடையே வீட்டு மனை பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் முத்து வேல் வீட்டின் குடிநீர் குழாயை சுப்ரமணி மற்றும் அவரது மகன் விமல்ராஜ், 25; ஆகியோர் உடைத்துள்ளனர். இதனை முத்துவேல் மற்றும் அவரது மனைவி பூவிழி, 38; தட்டிக்கேட்டதால் ஆத்திர மடைந்த விமல் ராஜ் கத்தியால் பூவிழியின் முகத்தில் வெட்டினார். பலத்த காயமடைந்த பூவிழி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெளிமேடுபேட்டை போலீசார், சுப்ரமணி, விமல்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
11-Aug-2025