மேலும் செய்திகள்
மாயமான முதியவர் சடலமாக மீட்பு
47 minutes ago
திண்டிவனம்: தலை தீபாவளிக்கு, பெற்றோர் வீட்டிற்கு வந்த புது மணப்பெண், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, காரை காலனி யை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி கவிதா, 22; இவர்களுக்கு ஆக., 28ல் திருமணம் நடந்தது. தலை தீபாவளிக்கு இருவரும், திண்டிவனம் அடுத்த ஊரலில், கவிதாவின் பெற்றோர் வீட்டிற்கு, அக்., 20ல் வந்தனர். அங்கு தீபாவளி கொண்டாடி விட்டு , பிரசாந்த் தன் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்த கவிதாவை காணாததால், உறவினர்கள் பல இடங்களில் தேடிய நிலையில், கவிதாவின் செருப்பு, அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் நிலத்தில் உள்ள கிணறு அருகே கிடப்பதை பார்த்தனர். தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், சில மணி நேர தேடுதலுக்கு பின், கிணற்றில் இருந்து கவிதாவின் உடலை மீட்டனர். ரோஷணை போலீசார் விசாரித்தனர். அதில், வயலில் மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை பிடித்து வர சென்றவர், தவறி கிணற்றில் விழுந்தது தெரிந்தது.
47 minutes ago