உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டப்பணி ஆய்வு கூட்டம்

மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டப்பணி ஆய்வு கூட்டம்

விழுப்புரம்:விழுப்புரத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசுகையில், 'மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆண்டுதோறும் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் விபரம், வழங்கப்பட்ட வங்கிக் கடனுதவிகள், அதன்மூலம் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிறப்பான சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிக்கான முன்மொழிவுகளை ஒரு வாரக்காலத்திற்குள் அனுப்ப வேண்டும். கிராம வறுமை ஒழிப்பு நிதிக்கான முன்மொழிவுகளை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வாழ்வாதார நிதி முன்மொழிவுகளை ஒரு மாத காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை