மகளிர் குழுவினரின் சமத்துவ பொங்கல்
செஞ்சி: வல்லம் ஒன்றியம் மகாதேவி மங்கலம் கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.இதையொட்டி அம்மன் கோவில் முன்பு மகளிர் சுய உதவி குழு பெண்கள் பொங்கலிட்டு மஞ்சள், கரும்பு, மங்கள பொருட்கள், காய்கனிகள் வைத்து படையலிட்டனர். பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர்.இதில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.